Saturday, August 9, 2008

திரும்பி வருவாள் என்று...




காலை தென்றலுடன் ஆரம்பித்து
மாலை மயக்கத்தை நோக்கி செல்லும்
மனது!
அம்மனதை கொண்டு 
காற்றிலே கவிதை இயற்றி 
மழையிலே கவிதையை திருத்தி
இடியிலே கவிதையை முழங்கி
மின்னல் ஒளியிலே கவிதையை படித்து காட்டினேன்.
அதை கேட்டு -
புயல் காற்றாய் கலைந்து போனவளை நோக்கி 
பனி தூறலாய் இரு கண்ணீர் துளிகள் சிந்தி!
திரும்பி நடந்தேன் 
திரும்பி வருவாள் என்று... 

1 comment:

Selin George said...

மிகவும் கற்பனை வழம் செறிந்த கவிதை நண்பா..
வாழ்த்துகள்.

www.saintfatima.in