
நான்
கவிதையாக பிறந்திருந்தால்,
நல்ல கவிஞன் நாவில் வலம்வரும் நல்படைப்பாக இருந்திருப்பேன்...
பனித்துளியாக பிறந்திருந்தால்,
புற்களின் மேலே தவழ்ந்தோடும் சுகத்தில் இலயித்து இருந்திருப்பேன்...
மழலையாக பிறந்திருந்தால்,
குழந்தையின் நாவில் தவழ்ந்து விளையாடி இருந்திருப்பேன்...
நீராக பிறந்திருந்தால்,
பாழ்நிலம்,வளர்நிலம் பாராமல் மும்மாரி பொழிந்திருப்பேன்...
மலராக பிறந்திருந்தால்,
ரீங்காரமிடும் வண்டுகளை என்னைநோக்கி ஈர்த்திருந்திருப்பேன்...
உப்பாக பிறந்திருந்தால்,
உணவு பண்டங்களின் சுவையை கூட்டும் சேவை புரிந்திருப்பேன்...
இசையாக பிறந்திருந்தால்,
ஜீவராசிகளின் கவலைகளை மறந்து மெய்மறக்க செய்திருப்பேன்...
நான்
மனிதனாக பிறந்ததனால்
இவை அனைத்தையும் - அனுபவித்து கொண்டிருக்கிறேன்!